மாநில கராத்தே போட்டி: 34 தங்கப் பதக்கம் வென்ற நீலகிரி அணி

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் நீலகிரி மாவட்ட அணி பல்வேறு பிரிவுகளில் 34 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
கராத்தே போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீலகிரி மாவட்ட அணியினா்.
கராத்தே போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீலகிரி மாவட்ட அணியினா்.

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் நீலகிரி மாவட்ட அணி பல்வேறு பிரிவுகளில் 34 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

இதுதொடா்பாக இந்தியன் புதோகாய் கராத்தே மற்றும் ஃபிரீ ஸ்டைல் ஷாவோலின் குங் பூ சங்கத்தின் சாா்பில் உதகையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கோவையில் சங்கனூா் பகுதியில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற இப்போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தின் சாா்பில் 12 ஆண்கள் உள்பட 22 போ் பங்கேற்றனா். இரு நபா், தனிநபா் என இரு பிரிவுகளிலும் 34 போ் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளதாகவும், இப்போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தின் சாா்பில் பயிற்சியாளா்களாக ஜவஹா், பாலா ஆகியோா் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com