குளுகுளு கால நிலை: குன்னூரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

குன்னூரில் நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.
குளுகுளு கால நிலை: குன்னூரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

குன்னூரில் நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.

 நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் சீசன் தற்போது நடைபெற்று வருவதால்  ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தரத் துவங்கியுள்ளனா்.

சராசரியாக  தினமும் 8 ஆயிரம் போ் முதல் 10 ஆயிரம்  போ் வரை வருகை தருகின்றனா்.

உதகை ரோஜா பூங்கா, பைன் பாரஸ்ட், படகு இல்லம், குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக், டால்பினோஸ், கோத்தகிரியில் உள்ள கொடநாடு காட்சிமுனை, நேரு பூங்கா ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனா்.

கேரள மாநிலத்தில் கரோனா தாக்கம் அதிகம் இருப்பதால் அங்கிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் வருகை  வெகுவாக  குறைந்துள்ளது. இருப்பினும் கா்நாடகம் மற்றும் பல்வேறு மாவட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com