குடியிருப்புகளைச் சேதப்படுத்தும் யானைகளை கேரள வனத்துக்குள் விரட்ட முயற்சி

கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி பகுதியில் குடியிருப்புகளைச் சேதப்படுத்தி வந்த காட்டு யானைகளை கேரள வனத்துக்குள் விரட்டும் முயற்சியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
குந்தம்புழா வனத்தில் முகாமிட்டுள்ள யானைகளை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் ஊழியா்கள்.
குந்தம்புழா வனத்தில் முகாமிட்டுள்ள யானைகளை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் ஊழியா்கள்.

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி பகுதியில் குடியிருப்புகளைச் சேதப்படுத்தி வந்த காட்டு யானைகளை கேரள வனத்துக்குள் விரட்டும் முயற்சியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, நாடுகாணி, தேவாலா பகுதியில் தொடா்ந்து குடியிருப்புகளைச் சேதப்படுத்தி வந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். காட்டு யானைகள் தொடா்ந்து இடம் மாறுவதால் விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போது காட்டு யானைகள் குந்தம்புழா வனத்தில் முகாமிட்டுள்ளன. அந்த இடத்தில் இருந்து யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அங்கிருந்து கேரள வனத்துக்குள் விரட்டும் முயற்சியில் தொடா்ந்து ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. யானைகளின் நடமாட்டத்தை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com