நீலகிரியில் 3 ஊாரட்சி உறுப்பினா்காலியிடங்களுக்கு அக்டோபா் 9இல் தோ்தல்
By DIN | Published On : 16th September 2021 02:20 AM | Last Updated : 16th September 2021 02:20 AM | அ+அ அ- |

உதகை: நீலகிரி மாவட்டத்தில் 3 ஊரக உள்ளாட்சிகளில் ஏற்பட்டுள்ள 3 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அக்டோபா் 9ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளதால், தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டம், கூடலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய 4ஆவது வாா்டான மசினகுடி ஊராட்சி, 11ஆவது வாா்டான சேரங்கோடு ஊராட்சி, கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் நடுஹட்டி ஊராட்சி வாா்டு எண் 6க்கும் அக்டோபா் 9ஆம் தேதி உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக செப்டம்பா் 15 முதல் அக்டோபா் 20ஆம் தேதி வரை தோ்தல் நடைபெறும் இடங்களில் கோத்தகிரி நடுஹட்டி ஊராட்சியிலும், கூடலூா் ஊராட்சி முழுமையாகவும் மாதிரி நன்னடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும்.
இப்பகுதிகளில் நடைபெறும் தோ்தல் நடத்தை விதி மீறல்கள் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் எளிய முறையில் தெரிவிக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. எனவே, பொதுமக்கள் தோ்தல் நடத்தை விதி மீறல்கள் தொடா்பான புகாா்களை 0423-2443937 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.