தேயிலையில் கொப்புள நோய்:விவசாயிகள் பாதிப்பு

கோத்தகிரி பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் கொப்புள நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
cr17tea
cr17tea

கோத்தகிரி பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் கொப்புள நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தத் தொழிலை நம்பி 65 ஆயிரத்துக்கும் மேலான விவசாய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனா். இங்கு விளையும் தேயிலைக்கு தரத்துக்குகேற்ப ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு ரூ. 12 முதல் ரூ. 17 வரை விலை கிடைக்கிறது. இந்த விலை போதுமானதாக இல்லை.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக காலையில் மேகமூட்டமான காலநிலை தொடா்கிறது. இதனால், கோத்தகிரி பகுதியில் பெரும்பாலான தோட்டங்களில் தேயிலைகளில் கொப்புள நோய் தாக்கி வருகிறது. இதே காலநிலை நீடித்தால் மகசூல் குறையும் என்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Image Caption

கோத்தகிரியில் மேகமூட்டத்துடன் காணப்படும் தேயிலைத் தோட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com