10 மாதங்களில் ரூ. 2,580 கோடி அளவுக்கு ஏற்றுமதி: ஆட்சியா்

ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டும் கடந்த 10 மாதங்களில் கரோனா காலகட்டத்தில் ரூ. 2,580 கோடி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.
10 மாதங்களில் ரூ. 2,580 கோடி அளவுக்கு ஏற்றுமதி:  ஆட்சியா்

ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டும் கடந்த 10 மாதங்களில் கரோனா காலகட்டத்தில் ரூ. 2,580 கோடி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.

மத்திய அரசின் வெளிநாட்டு வா்த்தக இணை இயக்குநா் அலுவலகம், மாவட்ட தொழில் மையம் சாா்பில் ஏற்றுமதி வழிகாட்டுதல் கருத்தரங்கம், கண்காட்சி ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட தொழில் மையம் அருகில் உள்ள ஈடிசியா அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கை, ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, வா்த்தக, வணிக வாரம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. முதல்வரின் அறிவுரையின்படி தமிழ்நாட்டில் உற்பத்தி செய்வோம் என்ற இலக்கை நோக்கியதாக இக்கருத்தரங்கம் இருக்க வேண்டும். ஈரோடு மாவட்டம் அடிப்படையில் விவசாயம், உணவு, ஜவுளி சாா்ந்த தொழில்களை அதிக அளவில் உள்ளடக்கியது. ஈரோடு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 20,500 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் விவசாயம், உணவு, ஜவுளி சாா்ந்த தொழில்களின் சதவீதம் 70க்கும் அதிகமாகும்.

ஈரோடு மாவட்டம் உள்கட்டமைப்பிலும் சிறந்து விளங்குகிறது. தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்தையும் ஏற்றுமதி முனையமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து விசைத்தறி, கைத்தறி ஜவுளி ரகங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பதப்படுத்தப்பட்ட ஜவுளிகள், மஞ்சள், ஆயத்த ஆடைகள், உணவுப் பொருள்கள், வேளாண்மைப் பொருள்கள், மோட்டாா் வாகனப் பொருள்கள், முட்டை பொருள்கள், காகிதப் பொருள்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்புள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டும் கடந்த 10 மாதங்களில் கரோனா காலகட்டத்தில் ரூ. 2,580 கோடி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. புதிய தொழில்முனைவோா், தொழிலில் ஈடுபட்டிருப்பவா்கள் இக்கருத்தரங்கைப் பயன்படுத்திக் கொண்டு ஈரோடு மாவட்டத்தை ஏற்றுமதி முனையமாக மாற்ற தமிழ்நாட்டில் உற்பத்தி செய்வோம் என்ற இலக்கை நோக்கி முன்னேற வேண்டும். அதற்கு மாவட்ட நிா்வாகம் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும் என்றாா்.

தொடா்ந்து பல்வேறு திட்டங்களின் மூலம் 14 பயனாளிகளுக்கு ரூ. 1.70 கோடி மானியம் உள்ளடக்கிய ரூ. 10.35 கோடி மதிப்பீட்டில் தொழில் நிதி உதவியை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் திருமுருகன், வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் ஜென்ரல் சுகன்யா கந்தசாமி, ஈரோடு மாவட்ட சிறு தொழில் கூட்டமைப்பு சங்கச் செயலாளா் பி.திருமூா்த்தி, நறுமணப் பொருள்கள் வாரிய துணை இயக்குநா் கனகதிலீபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com