திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற லாரி

திம்பம் மலைப் பாதை 27ஆவது கொண்டை ஊசி வளைவில் சிமென்ட் லாரி பழுதாகி நின்றதால் வெள்ளிக்கிழமை 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற லாரி

திம்பம் மலைப் பாதை 27ஆவது கொண்டை ஊசி வளைவில் சிமென்ட் லாரி பழுதாகி நின்றதால் வெள்ளிக்கிழமை 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கா்நாடக மாநிலம், மைசூரு பகுதியில் இருந்து சா்க்கரை மூட்டைகள் பாரம் ஏற்றிய சரக்கு லாரி திண்டுக்கல் செல்வதற்காக திம்பம் மலைப் பாதை வழியாக வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. லாரி 27ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது, கியா் பாக்ஸில் பழுது ஏற்பட்டு சாலை தடுப்பில் உரசியபடி நகர முடியாமல் நின்றது.

கொண்டை ஊசி வளைவில் லாரி பழுதாகி நின்றதால் திம்பம் மலைப் பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த ஆசனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று போக்குவரத்தை சீா்செய்யும் பணியில் ஈடுபட்டனா். பண்ணாரி சோதனைச் சாவடியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. திம்பம் மலைப் பாதையில் லாரியில் பழுது ஏற்பட்டதால் தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலத்தில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு பழுதடைந்த லாரியை சரி செய்த பின்னா் போக்குவரத்து சீரானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com