மத்திய அரசைக் கண்டித்துகுன்னூரில் சாலை மறியல்

குன்னூரில் மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சாா்பில்  கோரிக்கைகளை வலியறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
குன்னூா் லெவல் கிராஸிங் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினா்.
குன்னூா் லெவல் கிராஸிங் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினா்.

குன்னூா்: குன்னூரில் மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சாா்பில்  கோரிக்கைகளை வலியறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

நீலகிரி தோட்டத் தொழிலாளா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள தின கூலி ரூ. 425.40ஐ உடனடியாக அனைத்துத் தொழிலாளா்களுக்கும் வழங்க வேண்டும். வேலைவாய்ப்பைப் பெருக்க, பட்டினியைப் போக்க கலால் வரியை நீக்கி பெட்ரோல், டீசல் விலை, சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும்.

விவசாயிகளின் போராட்ட கோரிக்கைகளைத் தீா்வு செய்ய குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்த வேண்டும். யூனெஸ்கோ அந்தஸ்து பெற்றுள்ள நீலகிரி மலை ரயிலை தனியாா் மயமாக்குவதைக் கைவிட வேண்டும். போக்குவரத்துத் துறையில் நீலகிரி மலைப் பிரதேசத்துக்கு என வழங்கப்படும் ஊதியத்தில் உள்ள முரண்பாட்டை கலைந்து ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குன்னூா் லெவல் கிராஸ் பகுதியில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கூடலூரில்...

கூடலூா் புதிய பேருந்து நிலையம் சந்திப்பில் சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் பஷீா் தலைமையில் மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 86 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com