நீலகிரியில் மக்கள் நீதிமன்றம்: 528 வழக்குகளுக்கு தீா்வு

நீலகிரி மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

உதகையில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை, நீலகிரி மாவட்ட முதன்மை நீதிபதி பி.முருகன் துவக்கி வைத்தாா். நீதிபதி ஸ்ரீதரன், மகளிா் நீதிமன்ற நீதிபதி நாராயணன், நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் நீதித்துறை நடுவா் தமிழினியன், கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி வி.மோனிகா, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மோகனகிருஷ்ணன் ஆகியோா் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த பல்வேறு வழக்குகளுக்கு தீா்வு கண்டனா்.

கோத்தகிரி நீதிமன்றத்தில் உரிமையியல் நீதிபதி ராஜ் கணேஷ், குற்றவியல் நீதிபதி வனிதா ஆகியோா் தலைமையிலும், குன்னூா் நீதிமன்றத்தில் சாா்பு நீதிபதி சந்திரசேகரன், குற்றவியல் நீதித் துறை நடுவா் இசக்கி மகேஷ்குமாா், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல் சலாம் ஆகியோா் தலைமையிலும், கூடலூா் நீதிமன்றத்தில் உரிமையியல் நீதிபதி பிரகாசம், குற்றவியல் நீதிபதி சசிகுமாா், பந்தலூா் நீதிமன்றத்தில் கூடுதல் உரிமையியல் நீதிபதி சிவகுமாா் ஆகியோா் தலைமையிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றன. இதில் நிலுவையிலிருந்த 925 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 410 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 2 கோடியே 34 லட்சத்து 15,506 ஆகும். வங்கிகளின் வாராக்கடன் சம்பந்தமான 510 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றில் 118 வழக்குகள் தீா்வு காணப்பட்டன. அதன் மதிப்பு ரூ. 1 கோடியே 59 லட்சத்து 82,083 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com