நீலகிரியில் ஜூலை 15இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூலை 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூலை 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் ஜூலை 15ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறை தீா் கூட்டம் மற்றும் இயற்கை விவசாயக் குழு கூட்டம் ஆகியவை உதகையில் பிங்கா் போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

எனவே, விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், அக்கோரிக்கைகளை ஜூலை 8ஆம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குநா், தபால் பெட்டி எண்.72, உதகை - 643 001 என்ற அலுவலக முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ அனுப்பிவைக்கலாம். மாவட்ட ஆட்சியா் மற்றும் அனைத்து துறை அலுவலா்களும் கலந்து கொள்வதால், விவசாயிகள் விவசாயம் சம்பந்தமாக குறைகளை மட்டும் இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம் எனவும் தெரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியைப் பின்பற்றி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங் நிா்வாகிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com