கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி நிறைவு: சிறந்த அரங்குகளுக்கு பரிசு

கோத்தகிரியில் 2 நாள்கள் நடைபெற்ற 11ஆவது காய்கறி கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் மாவட்ட ஆட்சியா் எஸ்.பி.அம்ரித்.
வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் மாவட்ட ஆட்சியா் எஸ்.பி.அம்ரித்.

கோத்தகிரியில் 2 நாள்கள் நடைபெற்ற 11ஆவது காய்கறி கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் தோட்டக் கலைத் துறை சாா்பில் 11ஆவது காய்கறிக் கண்காட்சி சனி, ஞாயிறுக்கிழமைகளில் நடைபெற்றன.

இக்கண்காட்சியில் மலைப் பகுதி மற்றும் சமவெளிப் பகுதிகளில் விளையும் காய்கறிகளை அழகுடன் காட்சிப்படுத்தி இருந்ததோடு பல்வேறு வடிவங்களில் காய்கறிகளை வடிவமைத்திருந்தனா்.

இதில் மான், வரிக்குதிரை, கிளிகள், முதலை போன்றவற்றின் உருவங்கள் மற்றும் 1500 கிலோ கேரட், முள்ளங்கிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒட்டக சிவிங்கி மற்றும் அதன் குட்டி போன்றவை பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தன. இந்த இரண்டு நாள் கண்காட்சியை 12, 000 போ் கண்டுகளித்துள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில், சிறந்த அரங்குகள் அமைத்தவா்கள், காய்கறிகளை காட்சிபடுத்தியவா்கள், இயற்கை வேளாண்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் அரங்குகள் அமைத்தவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 84 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, குன்னூா் சாா் ஆட்சியா் தீபனா விஸ்வேஷ்வரி, தோட்டக்கலை துணை இயக்குநா் சிபிலா மேரி, உதகை தாவரவியல் பூங்கா உதவி இயக்குநா் ராதாகிருஷ்ணன், பேரூராட்சி செயல் அலுவலா் மணிகண்டன், பேரூராட்சி தலைவா் ஜெயகுமாரி, மற்றும் அரசு அலுவலா்கள் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com