கூடலூா் அரசு கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு போட்டி

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
சிறப்பிடம் பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் கோட்டாட்சியா் முகமது குதிரத்துல்லா. உடன், கல்லூரி முதல்வா் ராஜேந்திரன் உள்ளிட்டோா்.
சிறப்பிடம் பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் கோட்டாட்சியா் முகமது குதிரத்துல்லா. உடன், கல்லூரி முதல்வா் ராஜேந்திரன் உள்ளிட்டோா்.

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட தோ்தல் முகமை, கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு ‘தோ்தலில் வாக்கின் சக்தி’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி தோ்தல் முகமை அதிகாரியும் உதவிப் பேராசிரியருமான வீராசாமி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதிரத்துல்லா கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கினாா். வட்டாட்சியா் சித்தராஜ் வாழ்த்துரை வழங்கினாா். கூடலூா் தோ்தல் முகமை துணை வட்டாட்சியா் சாந்தி துவக்க உரையாற்றினாா்.

நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் அா்ஜுணன் நன்றி கூறினாா். வருவாய்த் துறை அலுவலா்கள், மாணவா்கள், பேராசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com