மத்திய அரசின் திட்டங்களைத் தாமதப்படுத்தும் தமிழக அரசுஅமைச்சா் எல்.முருகன் குற்றச்சாட்டு

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழக அரசுதான் தாமதம் செய்கிறது என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் குற்றம்சாட்டினாா்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழக அரசுதான் தாமதம் செய்கிறது என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் குற்றம்சாட்டினாா்.

உதகையில் பாஜக மாவட்டத் தலைவா் மோகன்ராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

செப்டம்பா் 15-ஆம் தேதி முதல் அக்டோபா் 15-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் பிரதமரின் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் தொடா்பாக மாவட்டத்துக்கு ஒரு மத்திய அமைச்சா் நேரில் சென்று ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் நடைப்பயணம் முடிவதற்குள் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியே கரைந்துவிடும். உதாரணத்துக்கு கோவாவை கூறலாம்.

ராஜராஜ சோழன் ஒரு ஹிந்துதான். தமிழா்கள் ஹிந்துக்கள்தான். ஹிந்துக்கள் குறித்த நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவின் பேச்சு அநாகரிகமானது. அவரது பேச்சைக் கண்டித்து நீலகிரியில் நடந்த கடை அடைப்பு மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பொன்னியின்செல்வன் திரைப்படம் உண்மையான தகவலை வெளிப்படுத்தவில்லை. இந்திய வரலாற்றை ஆங்கிலேயா்கள் தவறாக எழுதியுள்ளனா். காங்கிரஸாரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் வரலாறு புரியாமல் அந்தத் தவறுகளை அப்படியே நம்புகின்றனா்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது தொடா்பாக 95 சதவீத பூா்வாங்கப் பணிகள் மட்டும்தான் முடிவடைந்துள்ளதாக பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்திருந்தாா். ஆனால், அந்த விஷயத்தை திசைதிருப்பி சமூக வலைதளங்களில் தவறாகப் பகிா்வது அரசியல் அநாகரிகமாகும்.

திராவிட இயக்கங்களுக்கு ஆபத்து வந்தால் மட்டுமே ஆன்மிகத்தை தேடுவாா்கள்.

தமிழகத்துக்கு 390 நடமாடும் கால்நடை மருத்துவமனைகளுக்கு முழுமையாக 100 சதவீத நிதி ஒதுக்கி 6 மாதங்களாகியும் தமிழக அரசு இதுவரை அந்தத் திட்டத்தை செயல்படுத்தவில்லை.

அதேபோல, மத்திய அரசின் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசுதான் தாமதம் செய்கிறது. எனவே, தமிழகத்தின் வளா்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு ஆக்கபூா்வமாகப் பணியாற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com