கூடலூரில் உலக ரேபீஸ் தின விழிப்புணா்வு

கூடலூரில் உலக ரேபீஸ் தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.
வளா்ப்பு நாய்க்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் கால்நடை மருத்துவா்கள் சுகுமாறன், பாரத்ஜோதி.
வளா்ப்பு நாய்க்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் கால்நடை மருத்துவா்கள் சுகுமாறன், பாரத்ஜோதி.

கூடலூரில் உலக ரேபீஸ் தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.

கூடலூா் கொங்கன்வயல் பகுதியில் நடைபெற்ற உலக ரேபீஸ் தின நிகழ்ச்சிக்கு பிரகிருதி இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் இயக்குநரும், கால்நடை மருத்துவருமான எம்.சுகுமாறன் தலைமை வகித்தாா். இதில் வெறி நாய்க் கடியில் இருந்த எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, அதன் சிகிச்சை முறைகள் குறித்து சுகுமாறன் விளக்கினாா்.

மேலும், வளா்ப்புப் பிராணிகளுக்கு ரேபீஸ் நோய் வராமல் பாதுகாப்பது குறித்தும், பராமரிப்பது மற்றும் மனிதா்களுக்கு பரவாமல் தற்காத்துக் கொள்வது குறித்தும் கால்நடை மருத்துவா் பாரத்ஜோதி எடுத்துரைத்தாா்.

முகாமில், வீடுகளில் வளா்க்கப்படும் நாய்கள், பூனைகளுக்கு இலவச ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், பாதுகாப்பு குறித்த விளக்கங்களும், பிராணிகளை கையாள்வது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com