ஆட்டோ ஓட்டுநா்கள் போராட்டம்

 நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் ஆட்டோ ஓட்டுநா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்டோ ஓட்டுநா்கள் போராட்டம்

 நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் ஆட்டோ ஓட்டுநா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் கூறியதாவது: நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள ராம்சந்த் ஆட்டோ நிறுத்தம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்டோ நிறுத்தத்தை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளனா்.

இந்நிலையில், இப்பகுதியில் ஆட்டோக்களை நிறுத்தக் கூடாது என்று கோத்தகிரி காவல் துறையினா் கூறுகின்றனா்.

இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

இதில், ஆட்டோ நிறுத்தத்துக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து ஆலோசிக்கும் வரை ஆட்டோக்களை அதே இடத்தில் நிறுத்திக்கொள்ளலாம் என்றாா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் கலைந்து சென்றனா்.

Image Caption

போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com