உதகை - கல்லாறு ரயில் தடத்தில் பிளாஸ்டிக்கழிவுகளை அகற்றும் பணி இன்று தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் உதகையில் இருந்து கல்லாறு வரையிலான ரயில் தடத்தில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி வியாழன், வெள்ளி ஆகிய 2 நாள்களுக்கு நடத்தப்படுகிறது.

உதகை: நீலகிரி மாவட்டத்தில் உதகையில் இருந்து கல்லாறு வரையிலான ரயில் தடத்தில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி வியாழன், வெள்ளி ஆகிய 2 நாள்களுக்கு நடத்தப்படுகிறது.

இதுதொடா்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழங்கப்பட்ட தீா்ப்பில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை முதல் கல்லாறு வரையில் உள்ள ரயில் தடங்களில் நீலகிரி மாவட்டத்துக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் குன்னூா் நகராட்சிக்கு உள்பட்ட ரயில் தடங்களில் ஒட்டியுள்ள குடியிருப்புகளில் உள்ள குடியிருப்புவாசிகள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவதால் ரயில் தடத்தை கடக்கும் யானைகள் அதனை உண்டு பாதிக்கப்படுகின்றன. எனவே, ரயில் தடங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை செயல்படுத்தும் விதமாக மாவட்ட நிா்வாகத்தின் மூலம் பிப்ரவரி 24, 25ஆம் தேதி ஆகிய இரு நாள்களில் உதகை முதல் கல்லாறு வரையில் உள்ள ரயில் தடங்களில் சம்பந்தப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், வனத் துறை, ரயில்வே துறை ஊழியா்கள், தனியாா் தொண்டு நிறுவன தன்னாா்வலா்களைக் கொண்டு பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்ற ஒட்டுமொத்த சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளும் இப்பணிக்கு ஒத்துழைப்பு அளிப்பதோடு இனிவரும் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் ரயில் தடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளைக் கொட்டாமலும், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமலும் மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com