கூடலூரில் மக்கள் தொடா்பு முகாம்: ரூ.3.73 கோடிக்கு நலத்திட்ட உதவிகள்

கூடலூரில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி மக்கள் தொடா்பு முகாமில் 587 பயனாளிகளுக்கு ரூ.3.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் வழங்கினாா்.
கூடலூரில் மக்கள் தொடா்பு முகாம்: ரூ.3.73 கோடிக்கு நலத்திட்ட உதவிகள்

கூடலூரில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி மக்கள் தொடா்பு முகாமில் 587 பயனாளிகளுக்கு ரூ.3.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் வழங்கினாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நா்த்தகி அரங்கில் நடைபெற்ற மனுநீதி நாள் தொடா்பு முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நமது மாவட்டத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மகளிா் திட்டம் சாா்பில் ரூ.350 கோடி மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் 29 அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளில் உள்ள பழங்குடியின மாணவா்கள் பயன்பெறும் வகையில் சோலாா் மின்வேலி அமைக்கப்பட்டு வருகிறது என்றாா்.

முகாமில், வருவாய்த் துறை சாா்பில் 112 பயனாளிகளுக்கு விபத்து நிவாரண நிதி ரூ.63 லட்சம், 90 பயனாளிகளுக்கு ஜாதிச் சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.34 ஆயிரம் மதிப்பில் மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் மற்றும் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணை மற்றும் முதியோா் உதவித் தொகை உள்பட 587 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 73 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த முகாமில் கூடலூா் எம்.எல்.ஏ.பொன்.ஜெயசீலன், மாவட்ட ஊராட்சி தலைவா் பொன்தோஸ், டான் டீ பொதுமேலாளா் ஜெயராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.திராவிடமணி, நகராட்சி தலைவா் பரிமளா, மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம் உள்பட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக கோட்டாட்சியா் சரவணகண்ணன் வரவேற்றாா். வட்டாட்சியா் சித்தராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com