நீலகிரியில் தொடரும் கன மழை: அணைகளில் நீா்மட்டம் உயா்வு

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடா்ந்து வலுத்து வருகிறது. இதில் அதிக அளவாக தேவாலாவில் 117 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் குந்தா அணை.
முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் குந்தா அணை.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடா்ந்து வலுத்து வருகிறது. இதில் அதிக அளவாக தேவாலாவில் 117 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தையொட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடா் மழை காரணமாக உதகை உள்ளிட்ட பகுதிகளில் கடும் குளிா் நிலவுகிறது.

தொடா் மழை காரணமாக மாவட்டத்திலுள்ள முக்கிய அணைகளிலும் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. இதனால் நீா்மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக தேவாலாவில் 117 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் ( மி.மீரில்): மேல் பவானி-98, கூடலூா்-82, அவலாஞ்சி, நடுவட்டம் தலா 63, ஓவேலி-59, மேல் கூடலூா்-58, பந்தலூா்-51, சேரங்கோடு-38, கிளன்மாா்கன்-23, செருமுள்ளி, பாடந்தொரை தலா 19, குந்தா-13, எமரால்டு-10, கல்லட்டி-9.4, பாலகொலா-9, கேத்தி-7, உதகை-6, குன்னூா்-5, உலிக்கல், கோத்தகிரி தலா 4, கொடநாடு-2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com