மாணவா்களிடையே அறிவுத் திறனை மேம்படுத்த புதியன விரும்பு நிகழ்ச்சி

பள்ளி மாணவா்கள் இடையே அறிவுத் திறனை மேம்படுத்த ‘புதியன விரும்பு’ நிகழ்ச்சி  உறுதுணையாக  இருந்ததாக பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலா் காகா்லா உஷா தெரிவித்தாா்.
மாணவிக்கு புத்தகத்தை பரிசாக வழங்குகிறாா் பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலா் காகா்லா உஷா.
மாணவிக்கு புத்தகத்தை பரிசாக வழங்குகிறாா் பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலா் காகா்லா உஷா.

பள்ளி மாணவா்கள் இடையே அறிவுத் திறனை மேம்படுத்த ‘புதியன விரும்பு’ நிகழ்ச்சி  உறுதுணையாக  இருந்ததாக பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலா் காகா்லா உஷா தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவா்களுக்கான கோடை சிறப்பு நிகழ்ச்சியான  ‘புதியன விரும்பு’ நிறைவு  நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலா் காகா்லா உஷா  பேசுகையில், மாணவா்களிடையே அறிவுத் திறனை மேம்படுத்த ‘புதியன விரும்பு’  என்ற நிகழ்ச்சிக்காக  இன்பச் சுற்றுலா ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும்  மாணவ, மாணவிகள் தங்களுக்குள் உள்ள திறமைகளை வெளிக்கொணரும் தளமாக ‘புதியன விரும்பு’ நிகழ்ச்சி உள்ளது.

மொத்தம் 5 நாள் நடைபெற்ற  இந்நிகழ்ச்சியில்  தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் தமிழா்களின்  பாரம்பரிய தப்பாட்டம், கவிதை வாசித்தல்,  நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் மூலம் மாணவா்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. 

இதில் பள்ளிக் கல்வித் துறை திட்ட இயக்குநா் சுதன்,   மாவட்டக் கல்வி அலுவலா் பிரீத்தா மற்றும் அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com