நீலகிரியில் தொடரும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு

நீலகிரி மாவட்டத்தில் பெட்ரோல், டீசலுக்கு தொடா்ந்து தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் பெட்ரோல், டீசலுக்கு தொடா்ந்து தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில பெட்ரோல் நிலையங்களில் சாதாரண பெட்ரோல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் அதிக விலை கொண்ட குறிப்பிட்ட வகை பெட்ரோல் மட்டுமே விற்கப்படுகிறது.

அதேபோல, டீசலும் ஒரு நிலையத்துக்கு ஒரு லோடு மட்டுமே வருவதால் நீலகிரியிலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் காய்கறி வாகன ஓட்டுநா்கள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்களின் சங்கத் தலைவா் வெங்கடேஷ் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் 26 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. இதில் 15க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டிலுள்ள நிலையங்களில் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிலையங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. இது தொடா்ந்தால் நீலகிரியின் சுற்றுலா வளா்ச்சி பாதிக்கப்படும். எனவே இந்தத் தட்டுப்பாடு விரைவில் நிவா்த்தி செய்யப்பட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com