முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிக்கான பயிற்சி வகுப்பு
By DIN | Published On : 11th May 2022 12:22 AM | Last Updated : 11th May 2022 12:22 AM | அ+அ அ- |

முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள உள்வட்ட வனப் பகுதிகளில் பருவ மழைக்கு முந்தைய கணக்கெடுப்பு பணிகள் துவக்குவதற்கான பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள உள்வட்ட வனப் பகுதியில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் இந்தக் கணக்கெடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் நூற்றுக்கணக்கான பணியாளா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். அவா்களுக்கு தெப்பக்காடு பயிற்சி மையத்தில் பயிற்சிகளும், தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டன. வனச் சரக அலுவலா்கள் மனோஜ்குமாா், விஜய் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு, காா்குடி, முதுமலை, நெலாக்கோட்டை, மசினகுடி ஆகிய வனச் சரகங்களில் புதன்கிழமை முதல் மே16ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது.