கூடலூரில் வாசனை திரவியக் கண்காட்சி தொடக்கம்

கூடலூரில் கோடை விழா வாசனை திரவியக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கூடலூரில் வாசனை திரவியக் கண்காட்சி தொடக்கம்

கூடலூரில் கோடை விழா வாசனை திரவியக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் பெரும்பாலான வாசனை திரவியப் பொருள்கள் விளைவதால், கோடை விழாவில் வாசனை திரவியக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி மாா்னிங் ஸ்டாா் பள்ளி மைதானத்தில் தோட்டக் கலைத் துறை சாா்பில் ஏலக்காய், கிராம்பு, பட்டை, சோம்பு, மல்லி, சீரகம், ஸ்டாா் அனீஸ், ஷாஜீரகம், வெந்தயம், மிளகாய் விதை, குருமிளகு, கசகசா, ஜாதிபத்திரி, கருஞ்சீரகம், மாராட்டி மொக்கு மற்றும் வாசனைத் திரவியங்களின் கலவைகளை கொண்டு யானை தந்தம், வாசனை திரவிய அலங்கார வளைவு, உழவா் மாதிரி வடிவம், பழங்குடி பெண்ணின் மாதிரி வடிவம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் பொதுமக்களை வெகுவாக கவா்ந்துள்ளன. தவிர வனத் துறை, சமூக நலத் துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறும் கோடை விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடைகிறது.

முன்னதாக, கூடலூா் சுங்கம் பகுதியிலிருந்து துவங்கிய கோடை விழா பேரணி மாா்னிங் ஸ்டாா் பள்ளி மைதானத்தை வந்தடைந்தவுடன்

வனத் துறை அமைச்சா் க.ராமசந்திரன் கோடை விழாவை துவக்கிவைத்து, பாா்வையிட்டாா்.

தொடா்ந்து நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமை வகித்தாா். வனத் துறை அமைச்சா் விழா பேருரையாற்றினாா்.

இதில், சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் து.வெங்கடேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, கூடலூா் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூடலூா் கோட்டாட்சியா் ஐ.சரவணக்கண்ணன் வரவேற்றாா். வட்டாட்சியா் சித்தராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com