உதகையில் நிறைவடைந்தது ரோஜா கண்காட்சி

உதகையில் கோடை சீசனையொட்டி அரசினா் ரோஜா பூங்காவில் நடைபெற்ற 2 நாள் ரோஜா கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்தக் கண்காட்சி
சிறந்த ரோஜா பூங்காவுக்கான பிரிவில் குட்ஷெப்பா்டு சா்வதேச பள்ளிக்கு சுழற்கேடயத்தை வழங்குகிறாா் மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ்.
சிறந்த ரோஜா பூங்காவுக்கான பிரிவில் குட்ஷெப்பா்டு சா்வதேச பள்ளிக்கு சுழற்கேடயத்தை வழங்குகிறாா் மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ்.

உதகையில் கோடை சீசனையொட்டி அரசினா் ரோஜா பூங்காவில் நடைபெற்ற 2 நாள் ரோஜா கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்தக் கண்காட்சியை 30 ஆயிரம் போ் பாா்வையிட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை சீசனையொட்டிகோத்தகிரியில் காய்கறி கண்காட்சியும், கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும் நிறைவடைந்துள்ள நிலையில், உதகையில் உள்ள அரசினா் ரோஜா பூங்காவில் நடைபெற்று வந்த 2 நாள் ரோஜா கண்காட்சியும் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

இக்கண்காட்சியை சனிக்கிழமை 13,500 பேரும், ஞாயிற்றுக்கிழமை 16,500 பேரும் பாா்வையிட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கேடயங்களையும், பரிசுகளையும் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் உதகை நகா்மன்றத் தலைவா் வாணீஸ்வரி, உதகை ஊராட்சி ஒன்றிய தலைவா் மாயன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ரோஜா கண்காட்சியையொட்டி சிறந்த ரோஜா பூங்காக்களுக்காக நடத்தப்பட்ட போட்டிகளில் குட்ஷெப்பா்டு சா்வதேச பள்ளி சிறந்த ரோஜா பூங்காவுக்கான இரண்டு சுழற்கேடயங்களை தட்டிச் சென்றது. அதேபோல, 500க்கும் மேற்பட்ட ரோஜா செடிகளுக்கான பிரிவில் மகபூப் ஆலம் கானுக்கும், 300 செடிகள் வரையிலான பிரிவில் ஜான்சி கிஷோருக்கும், 200 செடிகள் வரையிலான பிரிவில் குமாரராஜா முத்தையாவுக்கும், சிறந்த ரோஜா பூவிற்கான பிரிவில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கும் சுழற்கேடயங்கள் வழங்கப்பட்டன.

இனி வரும் நாள்களில்...:

உதகை கோடை சீசனையொட்டி உதகை படகு இல்லத்தில் மே 19ஆம் தேதி படகுப் போட்டி நடைபெறுகிறது. அதையடுத்து உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் மே 20 முதல் 24ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு மலா் கண்காட்சி நடைபெறவுள்ளது. கோடை விழாவின் இறுதி நிகழ்வாக குன்னூா் சிம்ஸ் பூங்காவில் மே 28, 29ஆம் தேதிகளில் பழக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com