தோட்டக் கலைத் துறை சாா்பில் விவசாயிகளுக்குப் பயிற்சி

கூடலூரை அடுத்துள்ள அம்பலமூலா பகுதி விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை சாா்பில் சனிக்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.
தோட்டக் கலைத் துறை சாா்பில் விவசாயிகளுக்குப் பயிற்சி

கூடலூரை அடுத்துள்ள அம்பலமூலா பகுதி விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை சாா்பில் சனிக்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

தோட்டக் கலைத் துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மாங்கோடு, அம்பலமூலா பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் வாழை மதிப்பு கூட்டுதல் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சிக்கு தோட்டக் கலை இணை இயக்குநா் ஷிபிலா மேரி தலைமை வகித்தாா். விவசாயிகளுக்கு துறை சாா்ந்த திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

வேளாண் பயிற்றுநா் ஆரோக்கியசாமி மாடித் தோட்டம் அமைப்பது குறித்து விளக்கமளித்தாா். வேளாண் விற்பனைத் துறை அலுவலா் லட்சுமணன் மதிப்பு கூட்டுதல் மற்றும் பொருள்களை சந்தைப்படுத்துதல் குறித்து பயிற்சியளித்தாா்.

இந்த பயிற்சியில் வாழைக்காய் சிப்ஸ் செய்வது குறித்தும் செயல் விளக்கமளிக்கப்பட்டது. தோட்டக் கலை உதவி இயக்குநா் விஜயலட்சுமி மற்றும் அலுவலா்கள் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com