உதகையில் மாா்ச் 5 முதல் 14 வரைநீலகிரி புத்தகத் திருவிழா

நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக புத்தகத் திருவிழா மாா்ச் 5 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளதாக

நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக புத்தகத் திருவிழா மாா்ச் 5 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, முதலாவது நீலகிரி புத்தகத் திருவிழா உதகை பழங்குடியினா் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் வரும் மாா்ச் 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.

காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவை பொதுமக்கள் இலவச பாா்வையிடலாம். நீலகிரி மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் ஒருங்கிணைந்து

இந்த புத்தகத் திருவிழாவை நடத்துகிறது.

இந்தப் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்படும் 60க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுகின்றன.

தொல்லியல் அருங்காட்சியகம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பழங்குடியினரின் கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், ஆளுமைகள் பங்கேற்கும் இலக்கிய நிகழ்வுகள் இத்திருவிழாவில் இடம் பெறவுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com