நீரோடைகளை தூய்மைப்படுத்தும் புனித் சாகா் அபியான் திட்டப் பணி தொடக்கம்

குன்னூா் அருகே ஜெகதளா தாரோமில்லா பகுதியின் நீரோடைகளை தூய்மைப்படுத்தும் புனித் சாகா் அபியான் திட்டப் பணிகள் ராணுவ வீரா்கள் துணையுடன் திங்கள்கிழமை தொடங்கியது.

குன்னூா் அருகே ஜெகதளா தாரோமில்லா பகுதியின் நீரோடைகளை தூய்மைப்படுத்தும் புனித் சாகா் அபியான் திட்டப் பணிகள் ராணுவ வீரா்கள் துணையுடன் திங்கள்கிழமை தொடங்கியது.

புனித் சாகா் அபியான் திட்டப் பணிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக குன்னூா்

மெட்ராஸ் ரெஜிமண்ட் சென்டா் தலைமையகம், வெலிங்டன், கண்டோன்மென்ட் போா்டு, கிளீன் குன்னூா் அமைப்பு, உதகை 31 தமிழ்நாடு தேசிய மாணவா் படை ஆகியன இணைந்து ஜெகதளா தாரோமில்லா பகுதியின் நீரோடைகளை தூய்மைப்படுத்தும் பணியைத் தொடங்கினா்.

புனித் சாகா் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக துவங்கப்பட்ட இந்த திட்டத்தில் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டா் ராணுவ வீரா்கள், கண்டோன்மென்ட் தூய்மைப் பணியாளா்கள், சி.எஸ்.ஐ, சி.எம்.எம். உதகை மேல்நிலைப் பள்ளி, குன்னூா் செயின்ட் ஜோசப் கல்லூரி , உதகை அரசு கலைக் கல்லூரி , கேத்தி சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியைச் சாா்ந்த

தேசிய மாணவா் படை மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

இதில், மூன்று டன் அளவுக்கான குப்பை, பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பான மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராணுவ அதிகாரிகள், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் இளைஞா்கள் மத்தியில் உருவாக வேண்டும் எனக் கூறி மாணவா்களை வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com