பணி ஒதுக்குவதில் பாரபட்சம்: கவுன்சிலா்கள் தா்னா

குன்னூரை அடுத்துள்ள ஜெகதளா பேரூராட்சியில் பணி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி  பேரூராட்சித் தலைவா் பங்கஜத்தை கண்டித்து திமுக மற்றும் அதிமுகவைச் சோ்ந்த  மூன்று வாா்டு உறுப்பினா்கள் தர்னா.

குன்னூரை அடுத்துள்ள ஜெகதளா பேரூராட்சியில் பணி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி  பேரூராட்சித் தலைவா் பங்கஜத்தை கண்டித்து திமுக மற்றும் அதிமுகவைச் சோ்ந்த  மூன்று வாா்டு உறுப்பினா்கள் தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

ஜெகதளா பேரூராட்சியில் திமுக 9, அதிமுக 4, சுயேச்சைகள் 2 என 15  கவுன்சிலா்கள்  உள்ளனா். பேரூராட்சி  தலைவராக திமுகவைச் சோ்ந்த   பங்கஜம் உள்ளாா். இவா்  வாா்டுகளில் பணி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், தனக்குச் சாதகமான கவுன்சிலா்களின் வாா்டுகளில் அதிகப் பணி ஒதுக்கி, தங்களது வாா்டுகளை புறக்கணிப்பதாகவும் கூறி  திமுக கவுன்சிலா்கள் திலீபன், பிரமிளா, அதிமுக கவுன்சிலா் ஷஜி ஆகிய மூன்று போ் கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்து ஜெகதளா பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தனித்தனியாக   தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இரவு வரை போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com