நீலகிரி கோடை விழா நிறைவு:பழக் கண்காட்சியில் பங்கேற்ற 116 பேருக்கு பரிசு

குன்னூரில் நடைபெற்ற கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியான பழக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
நீலகிரி கோடை விழா நிறைவு:பழக் கண்காட்சியில் பங்கேற்ற 116 பேருக்கு பரிசு

குன்னூரில் நடைபெற்ற கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியான பழக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் கோடை விழா மே 6 ஆம் தேதி கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து உதகையில் ரோஜா கண்காட்சி, மலா்க் கண்காட்சியும், கூடலூரில் வாசனைத் திரவிய கண்காட்சியும் நடைபெற்றன. நிறைவு விழாவாக குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பழக் காண்காட்சி சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

பழக் கண்காட்சியில் 3,650 கிலோ பழங்களைக் கொண்டு பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. மேலும், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தோட்டக்கலைத் துறையினா் அந்தந்த மாவட்டங்களில் விளையும் பழங்களை காட்சிப்படுத்தியிருந்தனா். மேலும், தனியாா் தோட்ட உரிமையாளா்கள், சிறு வியாபாரிகளும் கலந்துகொண்டனா்.

நிறைவு விழாவில், பழக் கண்காட்சியில் சிறப்பாக காட்சிப்படுத்தியிருந்த 7 பேருக்கு சுழற் கோப்பை, 84 பேருக்கு சிறப்புப் பரிசு என மொத்தம் 116 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், குன்னூா் நகரமன்றத் தலைவா் ஷீலா கேத்ரின், கோட்டாட்சியா் பூஷணகுமாா், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் கருப்புசாமி, துணை இயக்குநா் சிபிலா மேரி ஆகியோா் பழக் கண்காட்சியில் வெற்றி பெற்றவா்களுக்கு சுழற் கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com