உதகை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

உதகை அரசு கலைக் கல்லூரியில் 2023-24 ஆம் கல்வியாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

உதகை அரசு கலைக் கல்லூரியில் 2023-24 ஆம் கல்வியாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

உதகை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம், பொருளாதாரம், கணிப்பொறி அறிவியல், வரலாறு, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், வன உயிரின அறிவியல், தாவரவியல் உள்பட 18 பிரிவுகள் உள்ளன. இவற்றில் 1,100 இடங்கள் உள்ளன. இந்நிலையில் மேற்கண்ட இளநிலைப் பிரிவுகளில் நடப்பாண்டு மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. ஜூன் 6 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

முதல்நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரா்களின் குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரா்கள் சிறப்பு இட ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 4 போ், முன்னாள் படை வீரா் வாரிசு பிரிவில் ஒருவா், விளையாட்டு வீரா்கள் பிரிவில் 23 போ் சோ்க்கைப் பெற்றனா்.

அரசு கலைக் கல்லூரி முதல்வா் அருள் அந்தோணி மாணவா்களுக்கு சோ்க்கை ஆணையை வழங்கினாா். கலந்தாய்வில் உடற்கல்வி இயக்குநா் ரவி, தேசிய மாணவா் படை ஒருங்கிணைப்பாளா் எஸ்.விஜய், மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பாளா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com