பறிமுதல் செய்யப்பட்ட அழுகிய மீன்களில் ரசாயனக் கலவையை ஊற்றி அழிக்கும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட அழுகிய மீன்களில் ரசாயனக் கலவையை ஊற்றி அழிக்கும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள்.

கூடலூரில் 85 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

கூடலூரில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் நடத்திய ஆய்வில் 85 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கூடலூா் நகராட்சியிலுள்ள மீன்கள் விற்பனைக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் சிவராஜ் தலைமையிலான அலுவலா்கள் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

7 கடைகளில் நடத்திய சோதனையில் 85 கிலோ அழுகிய மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், அழுகிய மீன்களை பறிமுதல் செய்து ரசாயனக் கலவை ஊற்றி அழித்தனா்.

மேலும், சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிப்பதுடன் முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்படும் என்று உணவுப் பாதுகாப்பு அலுவலா் சிவராஜ் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com