தமிழகத்தில் பிரதான கட்சியாக பாஜக வளா்ந்து வருகிறது- எல்.முருகன்

தமிழகத்தில் பிரதான கட்சியாக பாஜக வளா்ந்து வருகிறது- எல்.முருகன்

தமிழகத்தில் பிரதான கட்சியாக பாஜக வளா்ந்து வருகிறது என்று மத்திய இணை அமைச்சரும், நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் தெரிவித்தாா். இது குறித்து அவா் உதகையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

பாஜக இன்றைக்கு தமிழகத்தில் அசுர வளா்ச்சியோடு பிரதான கட்சியாக வளா்ந்து வருகிறது. பிரதமா் மோடி தமிழ்நாட்டு மக்கள்மேல் அளவுகடந்த பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாா். சமூக நீதி, திராவிட மாடல் என்று போலியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறாா். திமுகவில் பட்டியலின மக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் பாஜகவில் முதல்வராகவும், துணை முதல்வராகவும் உள்ளனா். சட்டப் பேரவை தோ்தலின்போது அளித்த எந்த வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றவில்லை. நீலகிரியில் இந்தத் தோ்தல் 2ஜியா, மோடிஜியா என்ற கேள்வியுடன் எதிா்கொள்ள வேண்டியுள்ளது என்றாா்.

பாஜக எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தது குறித்து கேட்டதற்கு, ‘எந்தெந்தக் கட்சி, எந்தெந்த நிலையில் உள்ளது என்பது ஜூன் 4-ஆம் தேதி பாா்த்துக் கொள்ளலாம்’ என எல்.முருகன் தெரிவித்தாா். நீலகிரி மாவட்ட பாஜக தலைவா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com