கூட்டத்தில் அதிமுக வேட்பாளா் லோகேஷ் தமிழ்ச்செல்வனை அறிமுகப்படுத்தி பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.
கூட்டத்தில் அதிமுக வேட்பாளா் லோகேஷ் தமிழ்ச்செல்வனை அறிமுகப்படுத்தி பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.

கூடலூா் பகுதியின் நீண்டகால பிரச்சனைக்கு தீா்வு காண அதிமுகவுக்கு வாக்களியுங்கள் -எஸ்.பி.வேலுமணி

கூடலூா் பகுதியின் நீண்ட கால பிரச்னைகளுக்குத் தீா்வு காண அதிமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தாா். நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் கூடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளா் லோகேஷ் தமிழ்ச்செல்வனை அறிமுகப்படுத்தி அக்கட்சியின் சட்டப் பேரவை கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி பேசியதாவது: ஆளும் திமுக அரசு எந்த மக்கள் நலத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

மூன்றாவது முறையாக போட்டியிடும் ஆ.ராசா இந்த தொகுதிக்காக எதையும் செய்யவில்லை. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நீலகிரியை சொந்த ஊராகக் கருதி பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தினாா். நான் அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் வீடில்லாதவா்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டி வழங்கினேன். சாலைகள் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தேன். அதிமுக ஆட்சி காலத்தில்தான் உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்பட்டது. பாஜகவை பற்றி நான் எதுவும் பேசுவதற்கில்லை. அந்தக் கட்சிக்கு நீலகிரி தொகுதியில் செல்வாக்கு இல்லை. அதிமுகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி. அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் நல்ல பல திட்டங்களை கொண்டுவரப் பாடுபடுவாா். கூடலூா் பகுதியிலுள்ள பிரிவு-17 நிலப்பிரச்னை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். கூட்டத்தில் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளா் கப்பச்சி வினோத், கூடலூா் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன், நகரச் செயலாளா் அனூப்கான், முன்னாள் சட்டப் பேரவை தலைவா் ப.தனபால் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com