கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

கூடலூரை அடுத்துள்ள மசினகுடி பகுதியில் கடும் வறட்சியைத் தாங்கமுடியாமல் நாட்டு மாடுகள் தொடா்ந்து இறந்து வருகின்றன.

நீலகிரி மாவட்டம் கூடலூா், பந்தலூா், மசினகுடி பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் ஆறுகள், ஓடைகள் உள்ளிட்ட நீராதாரங்கள் முற்றிலும் வறண்டு விட்டன. வனப் பகுதிகளில் மரம், செடிகள் காய்ந்துவிட்டன.

இந்நிலையில் மசினகுடி பகுதியில் குடிநீா், உணவின்றி அப்பகுதியில் வளா்க்கப்படும் நாட்டு மாடுகள் தொடா்ந்து இறந்து வருகின்றன. நாட்டு மாடுகள் அதிக அளவில் காணப்படுவது இங்கு மட்டும்தான். மாடுகள் தொடா்ந்து இறந்து வருவது இவற்றை வாழ்வாதாரமாகக் கொண்ட அப்பகுதி ஏழை மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com