பாறையின் இடுக்கில் உள்ள தண்ணீரைத் தேடும் யானைகள்.
பாறையின் இடுக்கில் உள்ள தண்ணீரைத் தேடும் யானைகள்.

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

உதகை, மே 3: நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வறண்டு கிடக்கும் பாறைகளின் இடுக்குகளில் யானைகள் தண்ணீா் தேடின.

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீா் தேடி ஆறு காட்டு யானைகள் மேட்டுப்பாளையம்- குன்னூா் தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டுள்ளன.

இந்நிலையில், மேட்டுப்பாளையம்- குன்னூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கே.என்.ஆா். பகுதியில் 6 காட்டு யானைகள் குடிநீா்த் தேடி வறண்ட அருவியின் பாறைகள் மீது வெள்ளிக்கிழமை சுற்றித்திரிந்தன. பாறைகளின் நடுவே ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் சிறிய அளவு நீரை துதிக்கையால் உறிஞ்சிக் குடித்தும், கிடைத்த சிறிய அளவு நீரை தன் உடல் மீது ஊற்றிக் கொண்டும் சூட்டை தணித்துக் கொண்டன.

நீலகிரி மாவட்டம் வறட்சியின் பிடியில் இருந்து வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் வன உயிா்களுக்கு குடிநீா் கேள்விக் குறியாகியுள்ளது. எனவே யானைகள் நடமாட்டம் உள்ள வனப் பகுதிகளில் வனத் துறையால் கட்டப்பட்ட குட்டைகளில் நீா் நிரப்பி கோடைக் காலம் முடியும் வரை குட்டைகளை கண்காணிக்க வேண்டும் என்று வன உயிரின ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com