பொதுமக்கள் சார்பில் குளத்தை தூர்வாரும் பணித் தீவிரம்

வெள்ளக்கோவிலில் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பொதுமக்கள் குளத்தைத் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

வெள்ளக்கோவிலில் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பொதுமக்கள் குளத்தைத் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
காங்கயம் சாலையில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் குளத்துக்காடு எனும் பகுதி உள்ளது. இந்தக் குளத்தில் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்திருந்தன. குளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், நீர் வரும் பாதைகள் தடுக்கப்பட்டும், கழிவுநீர் தேக்கப்பட்டும் இருந்தது.
குளத்தை ஒட்டியுள்ள தனியார் நிறுவனத்தின் திரவ ரசாயனக் கழிவுகளும் குளத்தில் கலந்து வந்ததால் குளம் மாசடைந்துள்ளது. நிழல்கள் அறக்கட்டளை சார்பில் குளத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளையுடன் இணைந்து சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது பல்வேறு தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பொது மக்கள் குளத்தைத் தூர்வாரி வருகின்றனர்.
இதனால் உடனடியாகப் பலன் கிடைக்காவிட்டாலும், குளத்தில் மழைநீர் தேங்கும் போது நிலத்தடி நீர்மட்டம் உயரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பொது நலச் சேவையில் இளைஞர்களும், மாணவ, மாணவிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com