108 ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்த இளைஞர் கைது

திருப்பூரில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்த இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூரில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்த இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது:
திருப்பூர், செல்லம் நகர், பகவதி அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர்  டி.பிரகாஷ் (29).  இவரது தந்தை தர்மராஜுக்கு திடீரென ஞாயிற்றுக்கிழமை மாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம்.  உடனே பிரகாஷ், 108 ஆம்புலனஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  அதையடுத்து,  திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ்  பணியாளர்கள் விரைந்து சென்று தர்மராஜை பரிசோதனை செய்தனர்.
  அப்போது,  பிரகாஷ் மது போதையில் இருந்தாராம். அவர்,  தனது தந்தையை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல்,  ஏன் காலதாமதம் செய்கிறீர்கள் என்று சப்தம் போட்டு,  ஆம்புலன்ஸ் வாகனத்தின் பின்புறக்
 கண்ணாடியை  அடித்து, சேதப்படுத்தினாராம்.  இது குறித்து  108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்
ஆனந்த்பாபு  அளித்த புகாரின்பேரில்,  திருப்பூர் மத்திய போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com