உடுமலையில் குழந்தைகள் தின விழா

கோமங்கலம்புதூர் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

கோமங்கலம்புதூர் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைவர் டாக்டர் கே.பாலசுந்தரம் தலைமை வகித்தார். செயலர் தம்பு (எ) நந்தகோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதையொட்டி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள்,  ஆங்கில நாடகம் நடைபெற்றன. முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு குறித்து ஆசிரியர் ஏ.தாஜுதீன் பேசினார். முதல்வர் எம்.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
ஆர்ஜிஎம் பள்ளி:
உடுமலை ராஜலட்சுமி கெங்குசாமி மெட்ரிக். பள்ளியில் குழந்தைகள் தின விழாவையொட்டி  உணவுக் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு பள்ளிச் செயலர் நந்தினி ரவீந்திரன் பரிசுகள் வழங்கினார்.
ஆதர்ஷ் பள்ளி:
உடுமலையை அடுத்துள்ள பள்ளபாளையம் ஆதர்ஷ் மெட்ரிக். பள்ளியில் "நேருவும்-குழந்தைகளும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் பங்கேற்றுப் பேசினர். மேலும்,  மாறுவேடப் போட்டியும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி இயக்குநர் ஆ.ரங்கசாமி,  முதல்வர் ஜீ.ஜீவ அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com