பல்லடம் பகுதியில் அடர் வனம் திட்டம் தொடக்கம்

பல்லடம் பகுதியில் அடர் வனம் அமைக்கும் திட்டத்தை வனம் இந்தியா அறக்கட்டளைத் தொடக்கியுள்ளது.

பல்லடம் பகுதியில் அடர் வனம் அமைக்கும் திட்டத்தை வனம் இந்தியா அறக்கட்டளைத் தொடக்கியுள்ளது.
மரம் வளர்ப்பது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உள்ளிட்ட இயற்கை வளத்தை பாதுக்காத்தல் பணிகளை பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை அமைப்பு மேற்கொண்டு வருகிறது. மரக்கன்று நட்டு, வளர்த்து, பேணிக் காக்க மரக்காவலர்களையும் நியமித்துள்ளது.
தற்போது, புதிய முயற்சியாக அடர் வனம் ஏற்படுத்தும் முயற்சியில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் அடர் வனம் திட்டத்தைத் தொடக்கி ஜப்பானின் பிரசித்தி பெற்ற மியாவாக்கி முறையில் மரக்கன்றுகளை வளர்க்க முடிவு செய்துள்ளது.
விவசாய நிலங்களின் நான்கு பக்கமும் அடர்த்தியாக மரங்களை வளர்த்து அதன் மூலமாக மழையை வரவைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். குறைந்த மழைப் பொழிவு கொண்ட பல்லடம் பகுதியில் மழை வளத்தை பெருக்கும் நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தற்போது நில உரிமையாளர்களின் ஒப்புதலுக்கு இணங்க விவசாய நிலங்களைத் தேர்வு செய்து இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று வனம் இந்தியா அறக்கட்டளைத் தலைவர் சுவாதி கண்ணன், செயலாளர் ஸ்கை சுந்தரராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com