உடுமலையில் நவராத்திரி கலை விழா நாளை தொடக்கம்

உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில் நவராத்திரியையொட்டி இசை, இலக்கிய கலை விழா மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்க உள்ளன.

உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில் நவராத்திரியையொட்டி இசை, இலக்கிய கலை விழா மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்க உள்ளன.
உடுமலை, கார்த்திகை விழா மன்றம் சார்பில் 56-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிகள் செப்டம்பர் 21-ஆம் தேதி  தொடங்கி 29-ஆம் தேதி வரை நடை பெற உள்ளன. இதில், இசை நிகழ்ச்சி, ஆன்மிக பேருரை, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினமு ம் மாலை நேரங்களில் நடைபெற உள்ளன.
நிறைவு நாளான செப்டம்பர் 29-ஆ ம் தேதி புலவர் மா.ராமலிங்கம் தலைமையில் மனித வள மேம்பாட்டுக்கு உ ற்ற துணையாக இருப்பது ஆன்மிகமா? அறிவியலா? எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது. கார்த்திகை விழா மன்றச் செயலாளர் அங்கு. பாலசுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள், இந்து அறநிலையத் துறை அதிகாரி கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து
வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com