வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.


வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்படுவது தொடர்பாகவும், பிழையில்லாத வாக்காளர் பட்டியல் தயார் செய்வது தொடர்பாகவும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையரும், வாக்காளர் பதிவு அலுவலருமான க.சிவகுமார் பேசியது:
2019 ஜனவரி முதல் தேதியன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இருமுறை பதிவு மற்றும் பலமுறை பதிவு, ஒரே வகையான வாக்களர் பதிவுகள் போன்றவற்றை நீக்கம் செய்ய வேண்டும். கண்டறியப்பட்ட இறந்த வாக்காளர்கள் மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய பரிந்துரை மேற்கொள்ள வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளை இனம் கண்டு வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் சேர்க்க வேண்டும். வாக்குச் சாவடிகளை 100 சதவிகிதம் தணிக்கை செய்து சரி செய்ய பரிந்துரைக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் துணை வட்டாட்சியர் (தேர்தல்) ஜெயமாலா, வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com