பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதில்  முன்மாதிரியாக திகழும் காவிலிபாளையம்புதூர்

திருப்பூர், காவிலிபாளையம்புதூர் பகுதி பொதுமக்கள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

திருப்பூர், காவிலிபாளையம்புதூர் பகுதி பொதுமக்கள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டலத்துக்கு உள்பட்ட பழைய 14 ஆவது வார்டுக்கு உள்பட்டது காவிலிபாளையம்புதூர். 
இந்தப் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை ஞாயிற்றுக்கிழமைகளில் ஊர் பொதுமக்களே அப்புறப்படுத்த திட்டமிட்டனர். 
அதன்படி கடந்த ஒரு மாத காலமாக ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறார்கள் என பல தரப்பினரும் ஞாயிற்றுக்கிழமைகளில் குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுத்து அங்கு வீசப்பட்டுள்ள பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்பட மக்கும் தன்மை இல்லாத அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிலிபாளையம்புதூர் தொடக்கப் பள்ளி வளாகம், பள்ளியின் சுற்றுப்புறம், கழிவறை பகுதி, வீதிகள் என ஊரின் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒவ்வொரு வாரமும் பல மூட்டை பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இந்தக் கழிவுகளை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
கடந்த நான்கு வாரங்களில் மொத்தம் 50 மூட்டை பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. தற்போது, காவிலிபாளையம்புதூர் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்ட தூய்மையான பகுதியாக மாறி இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com