புதிய கட்டடங்களுக்கு வரி விதிப்பதில் தாமதம்: உரிமையாளர்கள் தவிப்பு

பல்லடம் நகராட்சிப் பகுதியில் கடந்த 6 மாதங்களாக புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களுக்கு வரி நிர்ணயம்

பல்லடம் நகராட்சிப் பகுதியில் கடந்த 6 மாதங்களாக புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களுக்கு வரி நிர்ணயம் செய்யாததால் நிரந்தர மின் இணைப்பு உள்ளிடவைகளைப் பெறமுடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பல்லடம் நகராட்சிப் பகுதியில் முறையாக அனுமதி பெற்று புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீடுகள், கட்டடங்கள், வணிக வளாகங்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் புதிய கதவு இலக்க எண் குறிப்பிட்டு வரி நிர்ணயம் செய்யாததால் நிரந்தர மின் இணைப்புகள் பெற முடியாமல் கட்டடங்களைக் கட்டியுள்ளவர்கள் பாதிப்படைந்துள்ளனர். புதிதாகக் கட்டங்களைக் கட்டியுள்ளவர்கள் தற்காலிக மின் இணைப்புகளைப் பெற்று கூடுதல் மின் கட்டணம் செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 
புதிய கட்டடங்களுக்கான வரி விதிப்புக் கட்டண விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருவதால் தமிழகம் முழுவதும் இதே நிலைதான் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. புதிய கட்டடங்களுக்கு வரி நிர்ணயம் செய்வதின் மூலம் நகராட்சிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். அதேசமயம், புதிய கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நிரந்தர மின் இணைப்புப் பெற ஏதுவாக இருக்கும் என பாதிக்கப்பட்டுள்ள புதிய கட்டடதாரர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com