அவிநாசியில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 16.79லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில், வரத்துக் குறைந்து 1,051மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச். ரகப் பருத்தி குவின்டால் ஒன்றுக்கு ரூ. 5,000 முதல் ரூ. 6,110வரை ஏலம் போனது. காலை முதல் இரவு வரை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் ரூ. 16.79லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.