தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம், குண்டடம் பகுதியில் ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: 
தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காகவே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த 50 ஆண்டு காலமாக முடங்கிக் கிடந்த அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தற்போது ரூ.1, 654 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
 வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கு மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் இனி 365 நாள்களாக நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இரு வழிச் சாலைகள் அனைத்தும் நான்கு வழிச் சாலைகளாக மாற்றப்படும்.
 ஏழை, எளிய குழந்தைகளும் தரமானக் கல்வி பெற வசதியாக நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் மழலையர் (எல்.கே.ஜி) வகுப்புகள் தொடங்கப்படும். மேலும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கு ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஸ்மார்ட் கணினிகள் வழங்கப்பட்டு, ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும்.
அனைத்துக் குழந்தைகளுக்கும் சீருடைகளில் மாற்றம் செய்யப்பட்டு பல வண்ணச் சீருடைகளும், காலணிகளுக்கு மாற்றாக ஷூக்கள் வழங்கப்படும். அதேபோல, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்றார்.
இந்தப் பிரசாரத்தின்போது நந்தவனம்பாளையம் உள்ளிட்ட சில இடங்களில் திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதில், முன்னாள் அமைச்சர் ராமலிங்கம், அதிமுக மாவட்ட அவைத் தலைவர் ராஜு, பாஜக மாவட்டத் தலைவர் ருத்ரகுமார், தேமுதிக மாவட்டச் செயலாளர் முத்துவெங்கடேஷ்வரன் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com