நாட்டு மக்களுக்குப் பதிலாக நாற்காலியைத்தான் நேசிக்கிறார் மோடி: கே.சுப்பராயன்

நாட்டு மக்களை நேசிப்பதற்குப் பதிலாக பிரதமர் மோடி நாற்காலியைத்தான் அதிகம் நேசிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் தெரிவித்தார்.

நாட்டு மக்களை நேசிப்பதற்குப் பதிலாக பிரதமர் மோடி நாற்காலியைத்தான் அதிகம் நேசிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் தெரிவித்தார். 
திருப்பூர் வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட  மண்ணரை பாரப்பாளையம், ஸ்ரீநகர், மகாவிஷ்ணு நகர், ஏ.வி.பி. லேஅவுட், அவிநாசிக்கவுண்டன் பாளையம், அங்கேரிபாளையம்,வெங்கமேடு, செட்டிபாளையம், இந்திராநகர், பிரியங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து அவர் பேசியதாவது:
இந்தியாவில் பரந்து விரிந்த நிலப் பரப்பில் பல்வேறு மதங்களைக் கொண்ட, பல்வேறு வழிபாட்டு முறைகளை கொண்ட, பல்வேறு மொழி பேசக் கூடிய மக்கள் வசிக்கின்றனர். 
நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் நேசிப்பதே தேசபக்தி. ஆனால், பிரதமர் மோடி நாட்டு மக்களை நேசிப்பதற்குப் பதிலாக நாற்காலியைத்தான் அதிகம் நேசிக்கிறார். அவருக்கு இருப்பது போலி தேசபக்தி.
மக்களுக்கு இடையே பிரிவினையை தூண்டி வருகிறார். எனவேதான் தலித், முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஒரு மொழி, ஒரு மதம், ஒரு சட்டம் என்கிறார் மோடி. இதுதான் பாஜக, ஆர்.எஸ்.எஸின் கொள்கை என்றார்.
இந்தப் பிரசாரத்தில் காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், திமுக பகுதி கழகச் செயலாளர் ராமதாஸ், மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கே.பழனிசாமி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முதலாவது மண்டலச் செயலாளர் எஸ்.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com