அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் இன்று தேரோட்டம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழாவையொட்டி  புதன்கிழமை காலை 7 மணிக்கு அவிநாசியப்பர் தேரோட்டம்  நடைபெறகிறது.

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழாவையொட்டி  புதன்கிழமை காலை 7 மணிக்கு அவிநாசியப்பர் தேரோட்டம்  நடைபெறகிறது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதுமான கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கிது.
இதைத் தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெற்று வருகின்றன. 
செவ்வாய்க்கிழமை காலை பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளி ரத தரிசனம் 
நடைபெற்றன.
இதையடுத்து, முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மக்களவைத் தேர்தலையொட்டி நேரம் மாற்றப்பட்டு புதன்கிழமை காலை 7 மணிக்கு அவிநாசியப்பர் தேரோட்டம் நடைபெறுகிறது. இதேபோல, தேர்தல் நாளான வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கருணாம்பிகையம்மன் தேரோட்டம் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com