நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்ய ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கு அரசு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கு அரசு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்ய ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் நலச் சங்கத்தின் பல்லடம் கிளை கூட்டம் தலைவர் வி.கனகராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. செயலாளர் ஆர்.கிருஷ்ணன், பொருளாளர் வி.கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர் ஜி.பழனிசாமி, பொதுச் செயலாளர் பி.செல்வராஜ், துணைச் செயலாளர் சி.பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
இந்தக் கூட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கு அரசு நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 2015 நவம்பர் முதல் பஞ்சப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகை வழங்க வேண்டும். ஒப்பந்த உயர்வுகள் அடிப்படையில் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். 2018 ஏப்ரல் முதல் பணப் பலன்கள் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய நிலுவைகள் 15 சதவீதம் உயர்த்தியும், மருத்துவப்படியும் வழங்க வேண்டும்.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், லோகநாயகி, வேலுமணி, ஜெயலட்சுமி உள்ளிட்ட 21 புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் துணைத் தலைவர் எஸ்.ஈஸ்வரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com