வெள்ளக்கோவிலில் மின் இணைப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணி

வெள்ளக்கோவிலில் மின் இணைப்புகள் குறித்த கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. 

வெள்ளக்கோவிலில் மின் இணைப்புகள் குறித்த கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. 
பொதுவாக ஒவ்வொரு டிரான்ஸ்பார்மரில் இருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மின் இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.
அளவுக்கு அதிகமான மின் இணைப்புகள் இருந்தால் மின்னழுத்த ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு மோட்டார்கள், மின் சாதனங்கள் சேதமடைந்து பாதிப்புகள் ஏற்படும்.
இதனை தவிர்க்க தற்போது வெள்ளக்கோவில் துணை மின் நிலைய பகுதிகளில் மின் இணைப்பு விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்படுகின்றன.
மின் வாரிய அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் முதல் கட்டமாக காங்கயம் சாலையில் உள்ள மு.பழனிசாமி நகர் பகுதியில் ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. 
 ஒவ்வொரு கம்பத்தில் இருந்தும் எத்தனை இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன, மின் இணைப்பு எண், சிங்கிள் பேஸ், த்ரீ பேஸ், கம்பத்தில் இருந்து எவ்வளவு தூரம் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, மத்திய, மாநில அரசுகள் மின் விநியோக முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர உள்ளன.
வீடுகள், தொழிற்சாலைகள், விவசாயத்துக்கு தனித் தனி மின் வழித்தடம் அமைக்கும் திட்டம் உள்ளது. மின் திருட்டை தடுக்கவும், மின் கட்டணக் குளறுபடிகளைப் போக்கவும் டிஜிட்டல் ப்ரீபெய்டு மீட்டர்கள் பொருத்தும் திட்டமும் உள்ளது.
முன்னரே பணம் செலுத்தி பயன்படுத்துவதன் மூலம் தங்களுடைய தேவைக்கேற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பணம் தீர்ந்தவுடன் மீட்டரில் உள்ள மென்பொருள் மின்சாரம் செல்வதை தானாகவே துண்டித்துவிடும். ஆளில்லாமல் கணக்கெடுப்பு நடத்தவும் முடியும்.
இது போன்ற திட்டங்களை செயல்படுத்தவும், குறைபாடுகளைப் போக்கவும் துல்லிய விவரங்கள் தேவைப்படுகிறது எனத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com