மேற்கு மண்டல அளவிலான தீயணைப்பு வீரர்களுக்கு விளையாட்டுப் போட்டி

மேற்கு மண்டல அளவிலான தீயணைப்பு வீரர்களுக்கு விளையாட்டுப் போட்டி அவிநாசி அருகே உள்ள

மேற்கு மண்டல அளவிலான தீயணைப்பு வீரர்களுக்கு விளையாட்டுப் போட்டி அவிநாசி அருகே உள்ள பழங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.
 தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குநர் சி.கே. காந்திராஜன் உத்தரவின்படி நடைபெற்ற இப்போட்டியில் கோவை, நீலகிரி, திருப்பூர் , திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். 
 முதல் நாளில் கயிறு ஏறுதல், நீச்சல், கலாசார போட்டிகள் நடைபெற்றன. 2ஆம் நாளில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம், தடுப்பு ஓட்டம், 100, 400, 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
 பரிசளிப்பு விழாவில் மேற்கு மண்டல இணை இயக்குநர் எஸ். விஜயசேகர், தலைமை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கோப்பைகளை வழங்கினார்.
 4 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகியன இணைந்த அணி முதல் இடமும், திருப்பூர், திண்டுக்கல் அணி 2 ஆம் இடம், கோவை, நீலகிரி அணி 3ஆம் இடமும் பெற்றன.
தடகளப் போட்டியில் திருப்பூர், திண்டுக்கல் அணி முதலிடம், கோவை, நீலகிரி அணி 2ஆம் இடமும், ஈரோடு, நாமக்கல் அணி 3ஆம் இடமும் பெற்றன. திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com