அரசு கேபிள் டி.வி. செயல்பாடுகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

அரசு கேபிள் டி.வி. செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

அரசு கேபிள் டி.வி. செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
 பல்லடம் சாலையில் உள்ள பழைய மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவருமான கே.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து பேசியதாவது:
மக்களின் வாழ்வு மேம்பாட்டுக்காக தமிழக பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை அளிக்கும் வகையில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் கடந்த மே 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
தற்போது, தமிழகம் முழுவதும் ரூ.130 மற்றும் ஜிஎஸ்டி என்ற முறையில் மாதக் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்படுகிறது. மேலும், ஒரு கோடி இலவச செட்டாப் பாக்ஸ்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.  திருப்பூர் மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி ஆபரேட்டர்களின்  எண்ணிக்கை 951 ஆகும். இவர்களில் 669 பேர் அரசு செட்டாப் பாக்ஸ் பெற்றுள்ளனர். மாவட்டத்துக்கு ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 300 செட்டாப் பாக்ஸ்கள் வரப்பெற்றன. 
மேலும், பொதுமக்கள் அனைவரும் தனியார் செட்டாப் பாக்ஸ்களை தவிர்த்து, அரசு செட்டாப் பாக்ஸ்களை வாங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை நிறைவு செய்தவுடன் கால்நடைகள் பயன்பெறும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் நவீன  வசதிகளுடன் கூடிய 1968 என்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்படும் என்றார். 
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் ஏ.நடராஜன் (பல்லடம்), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), உ.தனியரசு (காங்கயம்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், மாவட்ட வருவாய் அலுவலர்ஆர்.சுகுமார், மாநகர காவல் துணை ஆணையர் இ.எஸ்.உமா, மாநகராட்சி ஆணையர் சிவகுமார்,  வருவாய் கோட்டாட்சியர் செண்பகவள்ளி, அரசு கேபிள் டி.வி. தனி வட்டாட்சியர் ஜெய்சிங் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com